ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கான தனித்திறன் கண்டறிதல் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை30) காலை 10 மணிக்கு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
10 முதல் 14 வயதுள்ள இருபால் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். உடல் தகுதியுடன் தனித்திறமையை வெளிப்படுத்தும் 10 ஆண்கள், 10 பெண்கள் என 20 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
20 பேருக்கும் 6 மாத கால சிறப்பு பயிற்சிக்கு பிறகு அரசு விளையாட்டு விடுதிகளில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் விருப்பமுள்ள மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குள் ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.