உலக புலிகள் தினத்தையொட்டி அரசு அருங்காட்சியகத்தில் விழிப்புணர்வுக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக புலிகள் தினம் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் புலிகள் குறித்த சிறப்பு புகைப்படங்களும், புலிகள் குறித்த சிறு குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து காப்பாட்சியர் பா.ஜென்சி கூறியதாவது:
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளை நாம் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புலிகள் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புலிகள் காப்பகமான சத்தியமங்கலம் வனத்தை பற்றியும், அதில் வாழும் புலிகளின் குணாதிசயங்கள், பிறப்பு, இறப்பு, தாய்மை, வாழும் இருப்பிடங்கள், குறித்தும், உலக அளவில் எந்தந்த வகை புலிகள் உள்ளன, எத்தனை எண்ணிக்கையில் உள்ளது. இந்தியாவில், தமிழகத்தில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறு குறிப்பாக வைக்கப்பட்டுள்ளது.
புலிகளின் வாழ்விடங்களில் பலநாள்கள் காத்திருந்து, நேரடியாக எடுக்கப்பட்ட புலிகளின் புகைப்படங்களும், சத்தியமங்கலம் வனத்தில் எடுக்கப்பட்ட புலிகளின் கால் தட அச்சு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர் என்றார்.