பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதியில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த திங்களூர், வெட்டையன்கிணறைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (40). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சீனாபுரத்தில் இருந்து அவரது ஊருக்கு திங்கள்கிழமை திரும்பிச் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.