மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி நுழைவாயிலில் திரண்ட மாணவர்கள், புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.