ஈரோடு

தகுதிச்சான்று இல்லாத 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

22nd Jul 2019 10:15 AM

ADVERTISEMENT

பவானியில் வாகனத் தகுதிச்சான்று இல்லாமல் சென்ற இரு டிப்பர் லாரிகள் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. 
பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் பவானி  - ஆப்பக்கூடல் சாலையில் பண்டாரப்பிச்சி கோயில் அருகே வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மண் பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 2 லாரிகளும் வாகனத் தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிவந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்ததோடு, அபராதம் விதிக்க கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT