ஈரோடு

கல்லூரி மாணவர்களுக்கு பொறுப்புணர்வு நிகழ்ச்சி

22nd Jul 2019 10:11 AM

ADVERTISEMENT

சமுதாயத்தின் மீது மாணவர்களின் பொறுப்புணர்வு நிகழ்ச்சி கோபி கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீ.தியாகராசு தலைமை வகித்தார். பேராசிரியர், இணைப் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சீனிவாசன் வரவேற்றார். இதில் பெங்களூரு வருமான வரித் துறை இணை ஆணையர் எஸ்.தமிழ்செல்வன் பங்கேற்று, மாணவர்களுக்கு தேவையான பொறுப்புணர்வு குறித்து பேசினார்.
 கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவர் பி.கருப்பண்ணன், செயலர், தாளாளர் எம்.தரணிதரன், கல்லூரி டீன் ஆர்.செல்லப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
 விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், இணைப் பாடத்திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT