கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி கை எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளியில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய இரு நாள்கள் எறிபந்து போட்டி நடைபெற்றன. இதில் 18 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் பல பிரிவுகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை டாக்டர் கந்தசாமி, பள்ளி நிர்வாக இயக்குநர்கள் ஜோதிலிங்கம், மோகன்குமார், பள்ளி முதல்வர் மகேஷ் கே.நாராயணன், துணை முதல்வர் முத்து விஜயன் உள்ளிட்டோர் பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ராஜகோபால், பயிற்சியாளர்கள் நவீன்குமார், ஈஸ்வரன், நீலாவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.