கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கோபியில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.