நந்தா பொறியியல் கல்லூரியில் தொழிற் கல்வியில் நெறிமுறைகள், தார்மீக மதிப்புகள் மற்றும் பண்புகளை வளர்த்தல் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் முதுகலை மேலாண்மை நிர்வாகத் துறை சார்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிதி உதவியுடன் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இரண்டு வாரங்கள் நடத்தப்பட்ட பயிற்சியின் தொடக்க நிகழ்வுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
கோவையில் உள்ள என்எஎல்எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முன்னாள் படைவீரர் சேஷாத்ரி வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை தொடக்கிவைத்தார்.
முன்னதாக முதுகலை மேலாண்மை நிர்வாகத் துறையின் தலைவர் என். தேவராஜன் வரவேற்றார். பயிற்சியின் இறுதி நாளில் கல்லூரி முதல்வர் என்.ரெங்கராஜன் பங்கேற்று பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சியில் கற்றுக்கொண்டது குறித்து கேட்டறிந்து, பயிற்சியின் பயன்கள் குறித்து பேசினார்.
பயிற்சியை ஏற்பாடு செய்திருந்த முதுகலை மேலாண்மை நிர்வாகத் துறை ஆசிரியர்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.