ஈரோடு

மதுரை வீரன் கோயில் பொங்கல் திருவிழா

6th Jul 2019 09:20 AM

ADVERTISEMENT

கொடுமுடி தாலுகா சிவகிரி கொல்லன்கோயிலை அடுத்த தாண்டாம்பாளையத்தில் உள்ள மதுரை வீரன் கோயிலில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயில் விழா புதன்கிழமை தொடங்கி சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வியாழக்கிழமை காலை சென்று  புனித தீர்த்தம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மதுரை வீரன் சுவாமிக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நேர்த்திக் கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT