பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.21 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
இங்கு புதன்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற ஏலத்துக்கு 6,149 மூட்டைகளில் 2227.22 குவிண்டால் பி.டி. காட்டன் பருத்தி வரத்து இருந்தது. இதில், குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.54.50 முதல் அதிகபட்சமாக ரூ.59.09 வரையில் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 69,611-க்கு வர்த்தகம் நடைபெற்றது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் கா.வீ.குமரேசன் தெரிவித்துள்ளார்.