ஈரோடு

மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்

4th Jul 2019 06:53 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அம்மா திட்டம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம்கள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர். 
 இதன்படி, ஈரோடு வட்டத்தில் கீழ்திண்டல் கிராம நிர்வாக அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் வடமுகம் வெள்ளோடு ஆர்.எஸ். ஊராட்சி அலுவலகம், மொடக்குறிச்சி வட்டத்தில் ஈஞ்சம்பள்ளி-ஆ கிராம நிர்வாக அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் பாசூர் கிராம நிர்வாக அலுவலகம், பவானி வட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம்,  சத்தியமங்கலம் வட்டத்தில் புதுப்பீர்கடவு கிராம நிர்வாக அலுவலகம், கோபி வட்டத்தில் பாரியூர் ஊராட்சி மன்ற அலுவலகம், அந்தியூர் வட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம், தாளவாடி வட்டத்தில் தொட்டமுதுக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம், நம்பியூர் வட்டத்தில் எம்மாம்பூண்டி-ஆ ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அம்மா திட்ட முகாம்கள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT