ஈரோடு

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் அரசுக் குழுவில் விடியல் சேகர்

4th Jul 2019 06:48 AM

ADVERTISEMENT

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு செல்லும் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் இடம்பெற்றுள்ளார். 
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வியாழக்கிழமை(ஜூலை 4) தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது.   
இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதிகள் குழு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தலைமையில் சிகாகோ செல்கிறது.  இந்தக் குழுவில் முன்னாள் எம்எல்ஏவும், தமாகா மாநில பொதுச்செயலருமான விடியல் சேகர் இடம்பெற்றுள்ளார்.  இவருக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT