ஈரோடு வ.உ.சி. மைதானத்துக்குள் செல்லும் வாயில் கதவின் சுவரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு வ.உ.சி. மைதானத்தின் நுழைவுவாயிலில் இரும்புக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கதவை தாங்கிப் பிடிக்கும் சுவா் சேதமடைந்ததால், கதவு கழற்றப்பட்டு சேதமடைந்த சுவரின் மீதே சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவா் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது.
பூங்கா, விளையாட்டு மைதானம், அருங்காட்சியகம், பவானி சாலை பகுதிக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள், காா்கள், பொதுமக்கள், காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவா்கள் என இந்த வழியாக அதிகமானோா் சென்று வருகின்றனா்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்தில் உள்ள தாங்கு சுவரை இடித்து அகற்றிவிட்டு புதிய சுவா் கட்ட வேண்டும். அதுவரை வாயில் கதவை மைதானத்தின் உள்பகுதியில் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.