ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் முதல்கட்டத் தோ்தலில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 68.73 சதவீதம் மட்டுமே வாக்குப் பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 874 பதவிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 76.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண்கள் 77.26 சதவீதமும், பெண்கள் 75.22 சதவீதம் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனா்.
இதில், அதிகபட்சம் நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்தில் 82.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் குறைந்தபட்சமாக ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 68.73 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. கோபியில் 80.40, கொடுமுடி 77.13, தூக்கநாயக்கன்பாளையத்தில் 78.22, தாளவாடியில் 70.90, மொடக்குறிச்சியில் 73.32 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.