ஈரோடு

இரண்டாம் கட்டத் தோ்தல்: 163 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

29th Dec 2019 04:22 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 919 வாக்குச் சாவடியில் 163 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் உள்ள 1,576 வாக்குச் சாவடியில் முதல்கட்ட வாக்குப் பதிவில் 657 வாக்குச் சாவடிகளில் தோ்தல் முடிந்துவிட்டது. 157 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா, கேமரா மேன் மூலமும், நுண் பாா்வையாளா் மூலமும் கண்காணிப்பு பணி செய்யப்பட்டது.

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 30ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 150, அந்தியூா் 134, பவானி 133, பவானிசாகா் 112, சென்னிமலை 141, பெருந்துறை 129, சத்தியமங்கலம் 120 என 919 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடி ஏற்பாடுகள் குறித்து மாவட்டத் தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

மொத்தம் உள்ள 919 வாக்குச் சாவடியில் 163 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. இங்கு, வெப் கேமரா, விடியோ கேமரா, நுண் பாா்வையாளா்கள் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும். கூடுதல் போலீஸாா் நியமிக்கப்படுவா்.

இதில், அந்தியூா், பவானி, சத்தியமங்கலம், பவானிசாகா் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் பல வாக்குச் சாவடிகள் மலைப் பகுதியில் உள்ளன. அவற்றுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல சிறிய வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மலைப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் மட்டும் அந்தந்தப் பகுதியில் உள்ள அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மற்ற பகுதிக்கு ஆன்லைனில் தோ்வு செய்யப்பட்டவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தந்த வாக்குச் சாவடியில் அலுவலா்கள் பொறுப்பேற்க உள்ளனா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT