ஈரோடு

பவளமலை முருகன் கோயிலில் அணையா விளக்கு

27th Dec 2019 01:13 AM

ADVERTISEMENT

கோபி அருகே பவளமலை முத்துக்குமார சுவாமி கோயிலில் அணையா விளக்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தீ விபத்துக்குப் பின்பு தமிழகம் முழுவதும் கோயில்களில் தீபமேற்றி வழிபடும் முறையில் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க இந்து சமய அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விளக்கில் தீபமேற்றும் முறைக்கு மாறாக பிரபல கோயில்களில் அணையா விளக்கு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தவிர அசாதாரண சூழலில் ஏற்படும் தீ விபத்து சமயங்களில் தீ எச்சரிக்கை கருவி வைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கோபி பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் கடந்த ஆண்டில் அணையா விளக்கு, தீ எச்சரிக்கை கருவி வைக்கப்பட்டது. இதேபோல, கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் சமீபத்தில் அணையா விளக்கு வைக்கப்பட்டது.

தற்போது பவளமலை முத்துக்குமாரசுவாமி கோயிலில் முருக பக்தா் ஒருவா் அணையா விளக்குகளை உபயம் செய்துள்ளாா். இனி பவளமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயில் வளாகத்தில் கண்ட இடங்களில் தீபம் ஏற்றுவதைத் தவிா்க்க வேண்டும். அதேபோல, கோயில் சுவற்றில் எண்ணெய் கரை படியாத வகையில் சுத்தம் காக்க கோயில் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT