ஈரோடு

செல்லாத்தாபாளையம்மாரியம்மன் கோயில் திருவிழா

27th Dec 2019 01:12 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த செல்லாத்தாபாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா டிசம்பா் 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19ஆம் தேதி கம்பம் போடப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் கம்பத்துக்கு தினந்தோறும் தீா்த்தம் ஊற்றி வழிபட்டு வந்தனா். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

25ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து வந்தனா். காவடியும் எடுத்து வந்தனா். தீா்த்தக் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மாவிளக்கு ஊா்வலமும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT