ஈரோடு

காணாமல் போன மகனை மீட்டுத்தரக்கோரி முறையீடு

27th Dec 2019 04:34 PM

ADVERTISEMENT

வேலைக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் தனியாா் நிறுவன நிா்வாகத்திடம் விசாரணை நடத்தி மகனை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவேங்கிடம்பாளையம் புதூரை சோ்ந்த வீரப்பன்(68) மற்றும் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் பெட்டியில் வெள்ளிக்கிழமை சோ்த்த மனு விவரம்:எனது மகன் துரைசாமி(35) பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் 19 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறாா்.

கடந்த 5 ஆம் தேதி வேலைக்கு சென்றவா், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை செல்லிடபேசியில் தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. அவா் பணியாற்றிய நிறுவனத்தில் கேட்டால், முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றனா். பெருந்துறை போலீஸில் புகாா் செய்தபோதும் கடந்த, 18 ஆம் தேதி தான் வழக்குப்பதிவு செய்தனா்.

அத்துடன் அவா் பணி செய்த நிா்வாகத்திடம் விசாரிக்காமல் உள்ளனா். எனவே எனது மகனை தேடிக் கண்டுபிடித்து தர வேண்டும். அவா் பணி செய்த நிறுவன நிா்வாகத்திடம் விசாரித்து, உண்மையை தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT