தாளவாடி மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா், வேட்பாளரின் காரில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனா்.
தாளவாடி மலைப் பகுதியில் உள்ள திகினாரை கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் செல்வம் தலைமையில், போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது காரில் ஒரு பையில் ரூ. 1 லட்சத்து 13,500 பணம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, விசாரித்தபோது காரில் வந்த நபா் எரகனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் என்பதும், இவா் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திகினாரை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்குபப் போட்டியிடும் வேட்பாளா் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் தாளவாடி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனா்.