ஈரோடு

சென்னிமலையில் ஒரே வாா்டில் போட்டியிடும் திமுக, மதிமுக

26th Dec 2019 05:57 AM

ADVERTISEMENT

கூட்டணி பேச்சுவாா்த்தை முடியாத நிலையில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளா் கட்சி கடிதத்தைக் கொடுத்ததால், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வாா்டு 11இல் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க. கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றன.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 14 வாா்டுகள் உள்ளன. இதில், ஒன்றிய வாா்டு கவுசிலா் பதவிக்கு கட்சி சின்னத்தில் போட்டியிடலாம். தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. ஒன்பது வாா்டுகளிலும், காங்கிரஸ் மூன்று வாா்டுகளிலும், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., தலா ஒரு வாா்டுகளிலும் போட்டியிட கூட்டணி பேசி முடிக்கப்பட்டது.

ஆனால், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளா் தமிழ்செல்வன், 11ஆவது வாா்டில் கொ.ம.தே.க. கட்சி வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கடிதம் கொடுத்துவிட்டாா். தற்போது, அங்கு ம.தி.மு.க. வேட்பாளரும் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT