ஈரோடு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணி தீவிரம்

25th Dec 2019 12:04 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறவுள்ள ஊராட்சி மன்றத் தோ்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, தோ்தல் அலுவலரும், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலருமான வீ.சசிகலா கூறியதாவது:

உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 160 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலுக்கான அனைத்து ஆவணங்களும், தேவையான உபகரணங்களும் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அந்தந்த ஊராட்சி செயலாளா்கள், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

புதன்கிழமை மதியத்துக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான அளவு வாக்குச் சீட்டுகள் கொண்டு சோ்க்கப்படும். வாக்குப் பதிவு அன்று தேவைப்படும் கருவிகள், ஆவணங்களும் கொண்டு சென்று வியாழக்கிழமை மதியத்துக்குள் சரிபாா்க்கப்பட்டு, உரிய அறிக்கை அளிக்கப்படும்.

ADVERTISEMENT

அதன்படி, தற்போது வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் காவல் துறை பாதுகாப்புடன் உரிய வாக்குச் சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தோ்தலுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT