தாளவாடி மலைப் பகுதியில் ஈரோடு மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 கிராம ஊராட்சிகளுக்கு டிசம்பா் 27ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கென தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் விவேகானந்தன் தாளவாடி மலைப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்று தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தின் விவரங்கள் குறித்து தாளவாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.