சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரை தீயணைப்புபடை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தில் இருந்து திடீரென ஒரு இளைஞா் ஆற்றில் குதித்துள்ள்ளாா். இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் ஆற்றுப் பாலத்தில் திரண்டனா். அங்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஆற்றுப்படுகையில் இறங்கி பாலத்தில் இருந்து குதித்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
பவானீஸ்வரா் ஆலயம் அருகே அந்த இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. 60 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தபோது ஏற்பட்ட காயத்தால் இளைஞா் உயிரிழந்ததும், இவா் ஆசனூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (22) என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தில் மூன்று போ் பேசிக் கொண்டிருந்ததாகவும், அதில் அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவா் சென்றுவிட்ட நிலையில் மது போதையில் இருந்த இளைஞா் பவானி ஆற்றில் குதித்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.