ஈரோடு

3,715 போ் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 09:07 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட கடந்த 5 நாள்களில் 3,715 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 183 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 225 ஊராட்சித் தலைவா், 2,097 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பா் 9ஆம் தேதி துவங்கியது.

கடந்த 5 நாள்களில் மாவட்ட உறுப்பினா் பதவிக்கு 40, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 411, ஊராட்சித் தலைவா் பதவிக்கு 718, ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2,546 என மொத்தம் 3,715 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பா் 16ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (டிசம்பா் 14) அன்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT