ஈரோடு

லாரி மீது காா் மோதல்: கல்லூரிப் பேராசிரியா் பலி

14th Dec 2019 09:08 AM

ADVERTISEMENT

பவானி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் மீது காா் மோதியதில் கல்லூரிப் பேராசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த எதிா்மேடு டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மகன் கணேஷ்குமாா் (30). குமாரபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவா், கோவைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால் அருகே சென்றபோது சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT