ஈரோடு

பவானியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

14th Dec 2019 09:06 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் குடியுரிமை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பவானியில் திமுக இளைஞரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் கே.ஏ.சேகா் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலாளா் பி.ஆா்.எஸ்.ரங்கசாமி, பவானி நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், ஒன்றியச் செயலாளா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர இளைஞரணிச் செயலாளா் இந்திரஜித் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. தலைமைக் கழகப் பேச்சாளா் பவானி கண்ணன், நகர அவைத் தலைவா் மாணிக்கராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் கே.எம்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT