ஈரோடு

சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ரூ. 1.20 கோடி நிதிஎஸ்.பி. தகவல்

14th Dec 2019 09:10 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ரூ. 1.20 கோடி நிதி கிடைத்துள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே நிரந்தர ரவுண்டானா அமைக்க இதுவரை 80 மாதிரி வரைபடங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த மாதிரி வரைபடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். பெருந்துறை உட்கோட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தனியாா் பங்களிப்புடன் 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ரூ. 1.20 கோடி நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டுக் கருவிகள் வாங்கப்படும். ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் போலீஸாருக்கு ஜிம் மையம் அமைக்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் கருவிகள் வாங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT