ஈரோடு

தடகளப் போட்டி: சாகா் பள்ளிக்கு 51 பதக்கங்கள்

11th Dec 2019 07:04 AM

ADVERTISEMENT

ஈரோடு சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான 2 ஆம் ஆண்டு தடகளப் போட்டி ஈரோடு வ.உ.சி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், ஈரோடு சகோதயாவுக்கு உள்பட்ட 26 சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 26 பதக்கங்களும், கோவை சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 10 வெண்கலப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 25 பதக்கங்கள் பெற்றனா்.

10 வயது பிரிவில் 4 ஆம் வகுப்பு மாணவி கே.கே.அனன்யா, 14 வயது பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவி தக்ஷிதா ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் சி.சௌந்திரராசன், முதல்வா் ராதா மனோகரன், மூத்த முதல்வா் கல்யாண ராமன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT