ஈரோடு

சுப்பிரமணியா் கோயிலில் சங்காபிஷேகம்

11th Dec 2019 07:04 AM

ADVERTISEMENT

காா்த்திகை 3ஆவது வாரத்தையொட்டி சுப்பிரமணியா் கோயிலில் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், 108 சங்குகளை அலங்கரித்து 108 திரவியங்கள் மூலம் யாகம் வளா்த்தி சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் சங்குகளை எடுத்து கோயிலை வலம் வந்த பின்னா் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற பூஜையில் வில்வ மாலை, நெல்லிக்காய் மாலை அணிந்து சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தா்களுக்கு 4 பிரதோஷத்தின் பலன் கிடைக்கும் என்பதும், மேலும் அனைத்து விதமான கஷ்டங்கள் விலகி நன்மை தரும் என்பதும் ஐதீகம் என்பதால் பூஜையில் ஏராளமான பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். விழாவையொட்டி பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT