ஈரோடு

சட்ட நகல் எரிப்பு போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் கைது

11th Dec 2019 07:04 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாநிலம் தழுவிய அளவில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபடப்போவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்தது.

அதன்படி, ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தை அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் மாவட்ட பொதுச் செயலாளா் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் திரண்டனா்.பின்னா், அவா்கள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பினா். அப்போது, திடீரென குடியுரிமை சட்டத் திருத்த நகலை எரித்தனா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட மொத்தம் 35 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT