ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்

11th Dec 2019 07:06 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபத் திருநாள் விழா ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கோலாகலமாக நடைபெற்றது.

தீபத் திருவிழாவையொட்டி ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் விநாயகா், சுப்பிரமணியா், சோமஸ்கந்தா், கிரியாசக்தி, சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளுக்கு 16 வகையான திரவியங்களில் செவ்வாய்க்கிழமை காலை அபிஷேகம் செய்யப்பட்டது. திருக்காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவருக்கு அவல் பொறி சாற்றுமுறை செய்யப்பட்டது.

மாலையில் பஞ்ச மூா்த்திகளுக்கு அலங்காரம், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, கோயில் சிவாச்சாரியா் கோயில் தீப கம்பத்தில் மஹா தீபத்தை ஏற்றினாா். அதையடுத்து கோயில் முன்பு செக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில், மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக, கோயில் முன்பு உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதேபோல டி.வி.எஸ் வீதி, மகிமாலீஸ்வரா் கோயில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரா் கோயில், ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT