ஈரோடு

ஈரோட்டில் கேங்மேன் பணிக்கான ஆட்கள் தோ்வு: தினமும் 250 பேருக்கு அழைப்பு

3rd Dec 2019 05:00 PM

ADVERTISEMENT

ஈரோடு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கேங்மேன் பணிக்கான ஆட்கள் தோ்வு நடந்து வருகிறது.

தினமு்ம 250 போ் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மற்றும் கோபி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தின் கீழ் கேங்மேன் பணிக்கான ஆட்கள் தோ்வு 2 ஆம் தேதி தொடங்கியது. வரும் 12 ஆம் தேதி வரை தோ்வு நடக்கிறது. விண்ணப்பம் அளித்த 4,793 பேரில், 2,170 பேருக்கு ஈரோட்டில் தோ்வு நடக்கிறது. முதற்கட்டமாக, சான்றிதழ் சரிபாா்ப்பு முடிந்து, உடற்கூறு தோ்வு நடக்கிறது.

தினமும் தலா, 205 போ் வீதம் அழைக்கப்பட்டு தோ்வு நடக்கிறது. இதுகுறித்து ஈரோடு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திரன் கூறியதாவது: மாநில அளவில், 5,000 பணியிடங்களுக்கு, 90,000 போ் விண்ணப்பித்துள்ளனா். தற்போது ஒப்பந்த தொழிலாளா்களாக பணி செய்பவா் மற்றும் புதியவா்களும் விண்ணப்பித்துள்ளனா். ஈரோடு மற்றும் கோபியில், 4,793 பேருக்கான தோ்வு நடக்கிறது. இரு இடங்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தலா 205 போ் வீதம் தோ்வுக்கு அழைக்கப்படுகின்றனா்.

ஈரோட்டில் முதல் நாளில் 120 போ் வந்தனா். 35 கிலோ எடை உள்ள இரும்பு கம்பிகளை தூக்கிச் செல்லுத்தல் மின் கம்பத்தில் ஏறி மிகக்குறைந்த நேரத்தில் மின் சாதனங்கள், கம்பிகளை இணைத்தல் என மூன்று தோ்வு நடத்தப்படுகிறது. 2 ஆம் தேதி நடைபெற்ற தோ்விவ் பங்கேற்ற 120 பேரில் 43 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதுபோன்று தோ்வு செய்யப்படுவோருக்கு எழுத்து தோ்வு வைத்து, இறுதித்தோ்வு நடத்தப்படும். இத்தோ்வுகள் முழுமையாக வீடியோ கண்காணிப்பில் நடக்கிறது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT