சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 17 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
கொடுமுடி, சிவகிரி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 59 விவசாயிகள் 804 மூட்டைகளில் 25 ஆயிரத்து 680 கிலோ எடையுள்ள நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 70.09 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 59.06 க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 17 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.