ஈரோடு

தனியார் ஐ.டி.ஐ.களில் மாணவர் சேர்க்கைக்கு இன்று கலந்தாய்வு

29th Aug 2019 07:06 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் வியாழக்கிமை, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29, 30) ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.
இதற்கு விண்ணப்பித்துள்ள பயிற்சியாளர்களின் மொத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இதில் வியாழக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் 8 ஆம் வகுப்பில் பொது பிரிவில் 79.60 சதவீதம் முதல் 39.40 சதவீதம் வரை மதிப்பெண் கொண்டவர்களுக்கு காலை 9 மணிக்கும், 10 ஆம் வகுப்பில் பொதுப் பிரிவில் 96 சதவீதம் முதல் 54.80 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு காலை 11 மணிக்கும், வெள்ளிக்கிழமை காலை பொதுப் பிரிவில் 54.60 சதவீதம் முதல் 37.20 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
மாவட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நபர்கள் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,  மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை அசல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT