நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சிதைக்கப்பட்டற்கு கண்டனம் தெரிவித்தும், இச்செயலைச் செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழ் புலிகள் கட்சி சார்பில் பவானியில் அந்தியூர் பிரிவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.பொன்னுசாமி தலைமை வகித்தார். மேற்கு மண்டல நிதிச் செயலாளர் அப்துல்லா, மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கிழக்கு மாவட்டச் செயலாளர் அழகர்சாமி, மேற்கு மாவட்டச் செயலாளர் திருவளவன், மாவட்டத் துணைச் செயலாளர் செம்பன், பவானி தொகுதிச் செயலாளர் தமிழ்குமார், பவானி ஒன்றியச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.