பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 67 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் த.ராமன் தலைமை வகித்தார்.திங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திம்மராயன் வரவேற்றார்.
சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து 67 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
விழாவில், 9 பள்ளிகளைச் சேர்ந்த 67 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இதில், பெருந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டி.டி.ஜெகதீஸ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துளசிமணி, துணைத் தலைவர் கே.ஆர்.சின்னசாமி, பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.