ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு இன்று ஆய்வு

27th Aug 2019 09:02 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (ஆகஸ்ட் 27, 28) ஆகிய 2 நாள்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு, மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.செம்மலை தலைமையில், 18 உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை ஈரோடு வருகின்றனர். இரண்டு நாள்களுக்கு இங்கு ஆய்வு செய்கின்றனர்.  
மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகம், மின் துறை, அரசு போக்குவரத்துக் கழகம், தொழில் முதலீட்டுக் கழகம், மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொது நிறுவனங்கள், கனிம வளம், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை போன்ற துறைகளுடன் இக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் தணிக்கை, பதிவு, நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்கின்றனர். அடிப்படை பணிகளை விரைவாக மேற்கொள்வது, பணியாளர்கள் நியமனம், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குதல் போன்றவை குறித்து ஆலோசனை தெரிவிக்கவுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT