ஈரோடு

குமுதா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

23rd Aug 2019 09:27 AM

ADVERTISEMENT

கோபி நம்பியூர் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், மழலையர்கள் கண்ணன், ராதை வேடமணிந்து வந்திருந்தனர். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழலையர்களின் திறமைகளைப் பாராட்டி பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், துணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.


கொங்கு கல்வி நிலையத்தில்...
ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
பள்ளித் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். முதல்வர் நதியா அரவிந்தன் வரவேற்றார். தாளாளர் செல்வராஜ் பேசினார். கிருஷ்ணர் சிலையை அலங்கரித்து இனிப்புகள், பழ வகைகள் படையல் இட்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.  கிருஷ்ணர் பக்தி பாடல்கள் பாடி, நடனம் ஆடி குழந்தைகள் கொண்டாடினர்.
மழலையர் வகுப்பு குழந்தைகள் கிருஷ்ணர்-ராதை வேடமிட்டு மாறுவேடப் போட்டியில் பங்கேற்றனர். 10 அவதாரங்களையும் வேடமிட்டு அதன் நோக்கம் குறித்தும், கிருஷ்ண அவதாரத்தின் பெருமை குறித்தும் மாணவர்கள் பேசினர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கொங்கு கல்வி அறக்கட்டளைப் பொருளாளர் பெரியசாமி, உதவித் தலைவர்கள் சின்னசாமி,  பாலசுப்பிரமணியன், இணை செயலாளர்கள் குணசேகரன், நாச்சிமுத்து, அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT