ஈரோடு

225 பெண்களுக்கு விலையில்லா இருசக்கர வாகனங்கள்

18th Aug 2019 09:05 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பணிக்குச் செல்லும் 225 பெண்களுக்கு அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 225 பெண்களுக்கு ரூ. 56 லட்சம் மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
 தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 கோபிசெட்டிபாளையம் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. ஆன்லைனில் ஆசிரியர்கள் தேர்வெழுதும்போது அவர்களுக்கான மதிப்பெண்கள் சரிபார்க்க முடியவில்லை என்ற ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு ஓ.எம்.ஆர். சீட்டில் குளறுபடி ஏற்பட்டதால் இந்தியாவில் முதல்முறையாக ஆன்லைனில் தேர்வு எழுதும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைனில் சிறு தவறு கூட நடைபெறாது என்றார்.
 ஈரோடு மாவட்டத்தை தனியாகப் பிரித்து கோபியை தனி மாவட்டமாக அறிவிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன் கருத்துக்கு தனி மாவட்டமாகப் பிரிப்பதற்கு இடம் தேவைப்படுகிறது. இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் பரிந்துரை செய்யப்படும். அனைத்து மாவட்டத்தையும் பிரிப்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது என்றார்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT