ஈரோடு

விளையாட்டுப் போட்டி: மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் பள்ளி சிறப்பிடம்

18th Aug 2019 09:08 AM

ADVERTISEMENT

ரங்கம்பாளையம் மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனர்.
 தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான ஈரோடு மாவட்ட கிழக்கு குறு மைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
 இதில், ரங்கம்பாளையம் மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெருவாரியான போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
 இளையோர், மூத்தோர் ஆண்கள் பிரிவில் தடகளப் போட்டி, தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்.
 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் மனோஜ் 15 புள்ளிகளும், மிக மூத்தோர் பிரிவில் சஞ்சய் 15 புள்ளிகளும் பெற்று தனிநபர் கோப்பையை வென்றனர். மேலும், மாணவர்கள் 119 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். 17 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை மாணவர்கள் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT