ஈரோடு

மயான வசதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

16th Aug 2019 06:43 AM

ADVERTISEMENT

மயான வசதி கேட்டு சுதந்திர தினத்தைப் புறக்கணித்து, கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 
ஈரோடு மாவட்டம், தென்முகம் வெள்ளோடு அருகே உள்ள பெரிய தொட்டிபாளையம் பகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மயான வசதி கேட்டு பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை மயான வசதி செய்து தரப்படவில்லை.  எனவே, மயான வசதி வேண்டி இப்பகுதி பொதுமக்கள் சுதந்திர தினத்தைப் புறக்கணித்து, கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் விரைவில் மயான வசதி தரப்படும் என எழுத்து மூலம் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT