ஈரோடு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் குடிமராமத்துப் பணிகள்

11th Aug 2019 08:42 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் காகத்தான்வலசு பகுதியில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளை வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.
 மொடக்குறிச்சி ஒன்றியம், காகத்தான்வலசு பகுதியில் உள்ள குளத்தை பராமரிக்க ரூ.ஒரு லட்சம் நிதி ஓதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
 நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணபதி, ஆவின் இயக்குநர் அசோக், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் தட்சிணாமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் சசிகுமார், மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெ.சாந்தி, வீ.சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT