ஈரோடு

மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கூட்டம்  

11th Aug 2019 08:45 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.ஆர்.சண்முகம் கொடியேற்றினார். சங்கச் செயலாளர் சி.ஜோதிமணி செயலறிக்கை வாசித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிசம்பர் 1 ஆம் தேதி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். கணக்கீட்டுப் பிரிவு, கணக்குப் பிரிவு, நிர்வாகப் பிரிவில் வேலைப் பளு அதிகம் உள்ளதால் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பணி செய்பவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
 மின் வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஐடிஐ படித்தவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் நேரடியாக கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத்துக்கு முரணாக மின் பாதை நீட்டிப்பு பணிகளில் நிரந்தரப் பணியாளர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். களப் பணிக்குத் தேவையான கருவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT