ஈரோடு

பூங்கம்பாடியில் அம்மா திட்ட முகாம்

11th Aug 2019 08:45 AM

ADVERTISEMENT

சென்னிமலை ஒன்றியம், பூங்கம்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 சென்னிமலை ஒன்றியம், பூங்கம்பாடி ஊராட்சி, பூங்கம்பாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
 முகாமுக்கு, பெருந்துறை வட்டாட்சியர் க.துரைசாமி தலைமை வகித்தார். முகாமில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு 8 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டன. முகாமில், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT