சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 10 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி, சிவகிரி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 19 விவசாயிகள் 119 மூட்டைகளில் 8 ஆயிரத்து 839 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில் கருப்பு எள் அதிகபட்சமாக ரூ. 133.99 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 130.99 க்கும், சிவப்பு எள் அதிகபட்சமாக ரூ. 126.42 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 103.23 க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 10 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.