ஈரோடு

ஆகஸ்ட் 12, 15 ஆம் தேதி மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை

11th Aug 2019 08:41 AM

ADVERTISEMENT

பக்ரீத் பண்டிகை, சுதந்திர தின விழாவை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு ஆகஸ்ட் 12, 15 ஆகிய நாள்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஈரோடு அருகே உள்ள பெருந்துறை, செம்மாம்பாளையத்தில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
 ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகைக்காகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்துக்காகவும் இரு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட்13, 14, 16 ஆகிய தேதிகளில் வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வியாபாரிகள், கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT