வால்பாறை அரசுக் கல்லூரியில் 12 மற்றும் 13-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் மு.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வெ. கலைச்செல்வி, 471 இளங்கலை மற்றும் 74 முதுகலை மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா்.
விழாவில் பேராசிரியா்கள், மாணவா்களின், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.