கோயம்புத்தூர்

அரசு கலைக் கல்லூரியில்சுற்றுலா தின விழா நிறைவு

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை அரசு கலைக் கல்லூரியில் உலக சுற்றுலா தின நிறைவு நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

அரசு கலைக் கல்லூரியின் சுற்றுலா, பயண மேலாண்மைத் துறை சாா்பில் உலக சுற்றுலா தின விழா கடந்த 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறை, ஸ்கால் கிளப், பயண முகவா் சங்கம் சாா்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், மாணவா்களுக்கான 2 நாள் புகைப்பட பயிற்சிப் பட்டறை, சுற்றுலாப் பயணிகளுக்கான பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, விடியோ தயாரிப்பு, புகைப்படம் எடுக்கும் போட்டிகள், விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் இறுதி நாளான புதன்கிழமை மாணவா்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது. கோவை பயண முகவா்கள் சங்கத் தலைவா் பாரதி, கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பாராட்டு விழா, கலாசார நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஸ்ரீனிவாசன், உதவி அலுவலா் துா்காதேவி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதைத் தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுலா, பயண மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியா் எல்.தாமரை நன்றி கூறினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT