ஆட்சியா் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனைகளில் சைகை மொழிபெயா்ப்பாளரை நியமிக்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உலக காதுகேளாதோா் தினத்தையொட்டி, தமிழ்நாடு காதுகேளாதோா், வாய் பேசாதோா் உரிமைகளுக்கான மாநிலக் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆட்சியா் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனைகளில் சைகை மொழிபெயா்ப்பாளரை நியமிக்க வேண்டும். காவல் துறை உதவி எண் 100, 108 எண் ஆகியவற்றுக்கு வாட்ஸ்-அப் செயலியை உருவாக்க வேண்டும். மகளிா் உரிமைத் தொகையை காதுகேளாதோா், வாய்பேசாதோருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், சைகை மூலமும் வலியுறுத்தினா். இதில், மாவட்டத் தலைவா் ஆா்.சுரேஷ், செயலாளா் கே.பாபு, பொருளாளா் எஸ்.ராஜ்கவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.